1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2016 (13:17 IST)

காதலனுக்காக விஜய்யுடன் நடிக்க கண்டிஷன் போடும் நயன்தாரா!!

தமிழ் சினிமாவில் தனக்கென மாஸான இடத்தை பிடித்து பெரிய நடிகராக இருப்பவர் விஜய். நடிகைகள் விஜய்யுடன் நடிக்க போட்டி போட்டு வருகின்றனர். 


 
 
ஆனால் நடிகை நயன்தாரா விஜய்யுடன் நடிப்பதற்கு கண்டிஷன் போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் நடனமாடிய நயன்தாரா, வில்லு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். 
 
இந்நிலையில் விஜய்யை வைத்து அட்லி இயக்கும் அடுத்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 
 
விஜய்யுடன் அடுத்த படத்தில் நடிக்க வேண்டுமென்றால், விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்று நயன்தாரா கண்டிஷன் போடுவதாக கிசுகிசுக்கப்படுகிறது.