Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டோரா’ காப்பி இல்லையாம்!

Sasikala| Last Modified வியாழன், 16 மார்ச் 2017 (15:39 IST)
நயன்தாரா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‘டோரா’ புதுமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கி உள்ளார். விவேக் மெர்வின் இசை அமைந்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நேமிஜந்த ஜெயக் நிறுவனத்துடன் இணைந்து சற்குணம் சினிமா தயாரித்துள்ளது.

 
இப்படம் திகில் கலந்த பேய் படமாக உருவாகியுள்ளது. காருக்குள் இருக்கும் பேய்க்கும் அதை ஓட்டும் நயன் தாராவுக்கும்  இடையில் நடக்கும் திக் திக் சம்பவங்கள்தான் கதை. ஆனால் இந்த கதை நான் எழுதியது எனதென்னிந்திய எழுத்தாளர்  சங்கத்தில் ஆர்.எம்,ஸ்ரீதர் என்பவர் புகார் தெரிவித்தார்.
 
இது தொடர்பாக தென்னிந்திய எழுத்தாளர் சங்கம் அறிக்கையில்:-
 
சம்பந்தப்பட்ட இரு கதைகளும் எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கதை ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு இரண்டு கதைகளையும் ஆய்வு செய்தது. இரண்டு படத்தின் கதையும், கதை நிகழ்வும், பாத்திரங்களும் வெவ்வேறானவை என்று அந்த குழு முடிவு செய்து அறிக்கை சமர்பித்துள்ளது.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :