வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 15 மார்ச் 2017 (18:23 IST)

நயன்தாரா மறுத்ததை ஏற்று கொண்ட அமலா பால்!

சித்திக் இயக்கும் படத்தில் அரவிந்த சாமி கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். இந்த படத்தின்  படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்கவிருக்கிறது.

 
மைனா படத்தை தயாரித்த நிறுவனம் ஹீரோயினை மையமாக வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறது. ஹீரோ இல்லாத இந்த  படத்தை தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் இணை இயக்குனர் வினோத் இயக்குகிறார்.
 
இந்த படங்களுடன் அறிமுக இயக்குனர் வினோத் இயக்கவிருக்கும் அட்வென்ஞர் படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார் அமலா பால்,  சிட்டி பின்னணியில் நடக்கும் இப்படத்தின் கதை அமலா பால் ஏற்கும் கேரக்டரை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.  நயன்தாரா மறுத்த கதை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.