1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 10 அக்டோபர் 2015 (20:16 IST)

நான் ஸ்டாப்பாக நடக்கும் நாயகி படப்பிடிப்பு

த்ரிஷா நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகிவரும் நாயகி படத்தின் 60 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக அப்படத்தின் இயக்குனர் கோவி கூறினார்.
 

 
நாயகி எண்பதுகளில் நடக்கும் கதையாக தயாராகி வருகிறது. படத்தின் கதையை கேட்டதுமே நடிக்க ஒப்புக் கொண்டார் த்ரிஷா. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சாமானியர்கள் முதல் சாதனையாளர் ராஜமௌலிவரை அனைவரையும் கவர்ந்தது. 
 
ஹாரர் படமாக தயாராகி வரும் நாயகியின் படப்பிடிப்பு, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களுக்கு நடுவில் உள்ள ஸஹீராபாத் புறநகர் பகுதிகளில் நடந்தது. நான் ஸ்டாப்பாக நடந்த படப்பிடிப்பு காரணமாக அறுபது சதவீத படப்பிடிப்பை ஏற்கனவே முடித்துவிட்டனர்.
 
இந்த வருட இறுதிக்குள் படத்தை இரு மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.