காரத்தில் காரத்தில் சில்லி இவ... ஒரு பாடலுக்கு இனி இல்லை இவ...

வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified புதன், 6 ஆகஸ்ட் 2014 (14:25 IST)
நர்கீஸ் பக்ரி பிரசாந்துடன் ஒரு பாடலுக்கு ஆடியதோடு, இனி ஒரு பாடலுக்கு ஆடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்.
பாலிவுட்டில் கவர்ச்சி புயலாக நுழைந்தவர் மாடலாக இருந்த நர்கிஸ் பக்ரி. இந்தியில் ஒரு பாடலுக்கு ஆடி பிரபலமானவர் மெட்ராஸ் கஃபே படத்தில் பத்திரிகையாளராக வந்து தனக்கு நடிக்கவும் தெரியும் என்று நிரூபித்தார். இவர் தியாகராஜன் தயாரிப்பில் பிரசாந்த் நடிக்கும் சாகஸம் படத்தில் காரத்தில் காரத்தில் சில்லி இவ என்ற பாடலுக்கு ஆடியுள்ளார்.
 
இந்த பாடலில் ஆடிய கையோடு, இனி ஒரு பாடலுக்கு ஆடுவதில்லை என முடிவெடுத்துள்ளார். தொடர்ந்து ஒரு பாடலுக்கு ஆடினால் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளாராம்.


இதில் மேலும் படிக்கவும் :