Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக்பாஸ் வீட்டில் நடப்பது பாதி தான் உண்மை. வெளியேறிய நமிதா


sivalingam| Last Modified வியாழன், 27 ஜூலை 2017 (22:04 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து சமீபத்தில் நமீதா  வெளியேற்றப்பட்டார். வெளியே செல்லும்போது தனக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்றும் பிக்பாஸ் வீடு ஒரு ஃபைவ் ஸ்டார் சிறை என்றும் கமல்ஹாசனிடம் கூறி சென்றார்.
 
இந்த நிலையில் நமீதா தற்போது பிக்பாஸ் குறித்து ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதி அதை வெளியிட்டுள்ளார். 'பாதி உண்மை' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்த கவிதையில் பிக்பாஸ் வீட்டில் 24 மணி நேரம் நடப்பதை ஒரு மணி நேரத்தில் சுருக்கி எடிட் செய்து காண்பிப்பதால் முழு உண்மையும் பார்வையாளரை போய் சேரவில்லை என்றும் பாதி உண்மைதான் செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.


 
 
மேலும் காலையில் தூங்கி எழுந்திருக்கும்போது இன்றைய நாள் நல்ல நாளாக இருக்க வேண்டும் என்று எழுந்தாலும், யாராவது ஒருவர் நம்மை தூண்டிவிட்டு ஆத்திரமடைய செய்துவிடுவார்கள் என்றும் ஓவியாவை அவர் மறைமுகமாக அந்த கவிதையில் தாக்கியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :