சமந்தாவுடன் பைக்கில் ஊர் சுற்றும் நாகசைதன்யா

VM| Last Modified ஞாயிறு, 13 ஜனவரி 2019 (12:00 IST)
சினிமாவில் டாப் நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகர்கள் சொகுசு கார் வாங்குவது போல் விலை உயர்ந்த பைக் வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

நடிகர் அஜித் , விஜய், சூர்யா ,கௌதம் கார்த்திக் , ஆகியோர் விலை உயர்ந்த ஆடம்பர பைக்  வைத்துள்ளார்கள்.
 
இவர்கள் ரசிகர்கள் தங்களை அடையாளம் கண்டுபிடித்து விடாதபடி தலையில் ஹெல்மட் மாட்டிக்கொண்டு நகர்வலம் வருகிறார்கள்.
 
தமிழ் பட கதாநாயகர்களை போல் தெலுங்கு பட கதாநாயகர்களும் விலை உயர்ந்த பைக்குகளை வாங்கி நகர்வலம் வருகிறார்கள். அந்தவகையில் நடிகை சமந்தாவின் கணவர் நாகசைதன்யா தெலுங்கில் பிரபலமான நடிகர் ஆவார். இவர் அண்மையில் ரூபாய் 22 லட்சத்தில் ஆடம்பரமான பைக் வாங்கியுள்ளார். அந்த பைக்கில் தனது காதல் மனைவி சமந்தாவுடன் ஹைதராபாத் நகர வீதிகளில் ஹெல்மெட் அணிந்தபடி இருவரும் உலா வருகிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :