Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழக அரசியலை விளாசும் ‘நான் ஆணையிட்டால்’

cauveri manickam| Last Modified திங்கள், 10 ஜூலை 2017 (18:28 IST)
ராணா டகுபதி நடித்துள்ள ‘நான் ஆணையிட்டால்’ படம், தமிழக அரசியலை விளாசும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.


 
‘பாகுபலி’ மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்த ராணா டகுபதி, தற்போது நடித்திருக்கும் தெலுங்குப் படம் ‘நேனே ராஜு நேனே மந்த்ரி’. காஜல் அகர்வால் ராணாவுக்கு ஜோடியாக நடிக்க, கேத்ரின் தெரேசா, நவ்தீப் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி ரிலீஸாகும் இந்தப் படத்தை, ‘நான் ஆணையிட்டால்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிடுகின்றனர்.

‘நான் ஆணையிட்டால்’ என்பது, எம்.ஜி.ஆரின் படத் தலைப்பு மற்றும் பாடல் வரி. அரசியல் படமான இதில், மூத்த அரசியல்வாதிக்கும், இளம் அரசியல்வாதிக்கும் இடையிலான மோதலைச் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டு அரசியல் தான் இந்தப் படத்தில் கையாளப்பட்டுள்ளதாம். ‘100 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுபோய் ரிசார்ட்ல அடைச்சி வச்சா நானும் சி.எம். தான்டா’ போன்ற வசனங்களும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :