Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மிஷ்கின் உதவியாளரைப் பாராட்டிய ரஜினி

புதன், 19 ஏப்ரல் 2017 (12:17 IST)

Widgets Magazine

மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள ‘8 தோட்டாக்கள்’ படத்தைப் பார்த்த ரஜினி,  அவருக்கு போன் செய்து பாராட்டியுள்ளார்.

 
புதிதாக வேலைக்குச் சேரும் சப்-இன்ஸ்பெக்டரிடம், 8 தோட்டாக்கள் நிரம்பிய துப்பாக்கி ஒன்று தரப்படுகிறது. தன்னுடைய  கவனக்குறைவால் அதைத் தொலைத்து விடுகிறார் எஸ்.ஐ. அதைக் கண்டுபிடிக்க அவர் படும் கஷ்டங்கள்தான் படத்தின் கதை.  முழுநீள க்ரைம் த்ரில்லரான இந்தப் படத்தில், புதுமுகங்கள் வெற்றி, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்திருந்தனர். அத்துடன், நாசர், எம்.எஸ். பாஸ்கர் போன்ற சீனியர் நடிகர்களும் நடித்துள்ளனர். 
 
விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட ரஜினி, படத்தைப் பார்க்க விரும்பியிருக்கிறார்.  எனவே, அவருக்காக ஸ்பெஷலாக பார்க்கும்படி படத்தை அனுப்பியிருக்கின்றனர். படத்தைப் பார்த்த ரஜினி, இயக்குநருக்கு  போன் செய்து, ‘பாராட்ட வார்த்தைகளே இல்லை. நீங்க ஜெயிச்சிட்டீங்க’ என்றாராம். அத்துடன், நாசர் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் இருவரின் நடிப்பையும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார் ரஜினி. ஆனால், இந்தப் படத்துக்குப் போதுமான  தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்பதுதான் வருத்தம். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தனுஷின் படத்திலிருந்து இந்த காரணத்துக்காகதான் வெளியேறினாரா அமலா பால்?

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் வடசென்னை. விஐபி படத்தில் ...

news

விஜய்யின் வில்லன் இப்போ விஜய் சேதுபதிக்கும் வில்லனா?

‘தெறி’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த இயக்குநர் மகேந்திரன், விஜய் சேதுபதியின் புதிய ...

news

நயன்தாராவிடம் தனது ஆசையை ஓப்பனாக கூறிய சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு பல நடிகர், நடிகைகள் ரசிகர்களாக உள்ளனர். அந்த வரிசையில் ...

news

ரஜினிக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? மீண்டும் சீண்டும் சுப்பிரமணியன் சுவாமி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை செல்ல முடிவெடுத்து பின்னர் ...

Widgets Magazine Widgets Magazine