வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 2 மார்ச் 2017 (20:22 IST)

விஜய் மகனும், அஜித் மகனும் தான் என் அடுத்த ஹீரோக்கள். எஸ்.ஜே.சூர்யா

இன்று எஸ்.ஜே.சூர்யா என்றால் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் வில்லன் மற்றும் விஜய் 61 படத்தின் வில்லன் என்றுதான் பலர் கூறுவார்கள். மிஞ்சிப்போனால் 'இசை' படத்தை இயக்கி நடித்தவர் என்று கூறலாம். ஆனால் அஜித்துக்கும் விஜய்க்கும் சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்




ஆம், அஜித் நடித்த 'வாலி' மற்றும் விஜய் நடித்த 'குஷி' படத்தின் இயக்குனர்தான் எஸ்.ஜே.சூர்யா. இந்த இரு படங்களுக்கு பின்னர் அஜித், விஜய்யை இயக்க அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. மேலும் தற்போது அவர் நடிகராக பிசியகிவிட்டதால் இப்போதைக்கு படங்கள் எதுவும் இயக்க போவதில்லை என்றும் கூறியுள்ளார்

இந்நிலையில் பிரபல வார இதழ் ஒன்றின் பேட்டியில் எஸ்.ஜே.சூர்யா கூறியபோது இன்னும் பத்து வருடங்கள் கழித்து மீண்டும் படங்கள் இயக்குவேன். அப்போது வாலி படத்தின் இரண்டாம் பாகத்தையும், குஷி படத்தின் இரண்டாம் பாகத்தையும் அஜித், விஜய்யை இயக்குகிறேனோ இல்லையோ, அவர்களுடைய மகன்களை நடிக்க வைத்து கண்டிப்பாக இயக்குவேன் என்று கூறியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா