Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெஸ்ஸியை பார்த்து மயங்கினேன். த்ரிஷாவிடம் ஜொள்ளுவிடும் விஜய்சேதுபதி


sivalingam| Last Modified திங்கள், 12 ஜூன் 2017 (22:13 IST)
கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாராவுடன் 'நானும் ரெளடிதான்' படத்தில் நடித்துவிட்ட விஜய்சேதுபதிக்கு எப்படியாவது த்ரிஷாவுடன் ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். அந்த ஆசை இன்று பூஜை போடப்பட்ட '96' படம் மூலம் நிறைவேறியது.


 


'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கவுள்ள இந்த படம் கடந்த 1996ஆம் ஆண்டு காலத்திய படமாம். அந்த காலகட்டத்தில் மாணவர் ஒருவருக்கும் ,மாணவி ஒருவருக்கும் தோன்றி காதல், பின்னாளில் எப்படி முடிந்தது என்பதுதான் கதையாம்

இன்றைய பூஜை முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த விஜய்சேதுபதி, கூறியதாவது, 'த்ரிஷா நடித்த விண்ணை தாண்டி வருவாயோ' படத்தை பார்த்து வியந்தேன். அந்த படத்தில் ஜெஸ்ஸியை பார்த்து மயங்கிய ஆயிரக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன். த்ரிஷாவுடன் இணைந்து நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. அந்த ஆசை இந்த படத்தில் நிறைவேறியுள்ளது' என்று கூறினார்.

இந்த படம் குறித்து த்ரிஷா கூறியபோது, ' ஒரு முழுநீள காதல் படத்தில் நான் நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இந்த படத்தில் ஒரு புது ஜோடி உருவாகியுள்ளதால் நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :