துப்பாக்கி படத்தை இயக்கியதற்கு வருதப்படுகிறேன்: முருகதாஸ்!!


Sugapriya Prakash| Last Updated: வெள்ளி, 28 ஜூலை 2017 (19:38 IST)
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் முதல் முறையாக நடித்த படம் துப்பாக்கி. இந்த படம் பயங்கர ஹிட்டாகியது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

 
 
இந்த படத்தில் ராணுவ வீரர்களின் நிலைமையையும் அவர்களது குடும்பங்களின் நிலையையும் எடுத்துரைத்திருப்பார் முருகதாஸ். துப்பாக்கி இதுவரை தமிழ் சினிமா கண்டிராத வெற்றியை பதிவு செய்தது. ரஜினியின் எந்திரன் படத்திற்கு பிறகு அதிக வசூலை இந்த படம் கண்டது.
 
இந்த படத்திற்காக விருதுகளும் பல குவிந்தன. இந்த படத்தின் வெற்றியே இவர்களது அடுத்த வெற்றி கூட்டணியான கத்தி படத்திற்கு வித்திட்டது. அட்லி இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.
 
ஆனால், முருகதாஸ் துப்பாக்கி படத்தை எடுத்தற்கு வருத்தப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.  இதற்கு பின்னணியில் நியாமான காரணம் ஒன்றுள்ளது.
 
அது என்னவெனில், துப்பாக்கி படத்தை பார்த்த முருகதாஸின் இஸ்லாமிய நண்பர் ஒருவர் ஏற்கனவே தீவிரவாதிகள் என்றால் இஸ்லாமியர்களை தான் காட்டுகிறார்கள். நீங்களுமா? என்று கேட்டுவிட்டாராம். 
 
இது எனக்கு மிகவும் வருத்தத்தை தந்தது. இப்படி ஒன்றை யோசிக்காமல் படத்தை எடுத்துவிட்டோமே என வருந்துகிறேன் என பேட்டியில் ஒன்றில் முருகதாஸ் கூறியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :