வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 25 பிப்ரவரி 2017 (17:53 IST)

முண்டாசுப்பட்டி கூட்டணியின் புதிய படம்... புதிய தகவல்கள்

முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராமும், நடித்த விஷ்ணுவும் மீண்டும் இணைகின்றனர். முதல் படம் ரொமான்டிக் காமெடி  என்றால் இந்தப் படம், சைக்கோ த்ரில்லர்.

 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் விஷ்ணுவுடன் அமலா பால் நடிக்க உள்ளார். படத்தில் விஷ்ணுவுக்கு இணை  இயக்குனர் வேடம்.
 
இரவில் நடக்கும் கதை என்பதால் பெரும்பாலான காட்சிகள் இரவில் படமாக்கப்பட்டு வருகின்றன. இதுவொரு சைக்கோ கில்லர்  திரைப்படம், முண்டாசுப்பட்டிக்கு முற்றிலும் மாறானது.
 
அசஸ் பிலிம் பேக்டரி மற்றும் ஸ்கைலார்க் என்டர்டெயின்ட்மண்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.