செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: சனி, 9 ஜனவரி 2016 (11:31 IST)

கருணாநிதிக்கு போட்டியாக களமிறங்கிய முக்தா சீனிவாசன்

சினிமாதுறையில் 70 வருடங்களாக இயங்கும் சீனியர் முக்தா சீனிவாசன். எம்.ஜி.ஆர். சிவாஜி, கமல், ரஜினி உள்பட முன்னணி நடிகர்கள் அனைவரையும் வைத்து படம் எடுத்திருக்கிறார். 44 படங்கள் இயக்கியிருக்கும் இவர், 25 வருடங்களுக்குப் பிறகு ஆக்ஷன், கட் சொல்லப் போகிறார்.


 
 
சரி, இதில் எங்கு கருணாநிதி வருகிறார்?
 
கருணாநிதி ராமானுஜர் தொலைக்காட்சி தொடருக்கு கதை, வசனம் எழுதுகிறார் அல்லவா? அதே ராமானுஜரின் கதையைத்தான் முக்தாவும் படமாக்கப் போகிறார். அது சின்னத்திரை, இது பெரிய திரை என்றாலும் போட்டி போட்டிதானே.
 
மார்ச் மாதம் தொடங்கயிருக்கும் தனது படத்தில் ராமானுஜராக புதுமுக நடிகரை நடிக்க வைக்க முக்தா சீனிவாசன் திட்டமிட்டுள்ளார். ஸ்ரீரங்கம், திருக்கோவில் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.