Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எம்.பி., எம்.எல்.ஏ.க்களே போய் தற்கொலை செய்துக்குங்க... ஆவேசப்பட்ட அமீர்

Sasikala| Last Modified திங்கள், 9 ஜனவரி 2017 (16:19 IST)
தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக விவசாயிகள் தொடர்ந்து மரணமடைந்து வருகின்றனர். இதனை சரி செய்ய வேண்டிய  அரசும், எம்எல்ஏக்களும், விவசாயிகள் மரணத்தை இயற்கை மரணம் என்று நெஞ்சில் ஈரமில்லாமல் சொல்லி வருகின்றனர்.

 
சென்னையில் இந்தப் பிரச்சனையை முன் வைத்து இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். அதில் கலந்து  கொண்டு பேசிய இயக்குனர் அமீர்,
 
"இது ஒரு சிறிய பொறிதான். இப்படியொரு போராட்டத்தை நடத்தும் சூழலுக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டதற்காக ஆட்சியாளர்கள்  வெட்கப்பட வேண்டும். விவசாயிகள் மரணத்துக்கு பொறுப்பேற்று இந்த அரசு ராஜினாமா செய்ய வெண்டும். விவசாயிகளை காப்பாற்றாத அரசு கலைக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை எம்பிகள், எம்எல்ஏக்கள் தற்கொலை செய்து  கொள்ள வேண்டும்" என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :