வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 27 மார்ச் 2017 (17:42 IST)

ஹீரோவிற்கு 5, வில்லனுக்கு 12, ஹீரோயினுக்கு 2: ஷங்கரின் பிரம்மாண்ட கணக்கு!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் 2.O. 


 
 
பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார். ரூ.400 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 
 
இந்நிலையில், இப்படத்தில் ரஜினி 5 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எந்திரன் படத்தில் சிட்டி ரோபோ, வசீகரன் என்ற இரண்டு கெட்டப்புகளில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரங்களை தவிர்த்து, வில்லத்தனமான ஒரு கெட்டப்பிலும் ரஜினி ‘அபூர்வ சகோதரர்கள்’ குட்டை கமல் மாதிரி இரண்டு கதாபாத்திரங்களும் ரஜினிக்கு இருக்கிறதாம்.
 
அவருக்கு போட்டியாக அக்ஷய்குமாருக்கும் இந்த படத்தில் 12 விதவிதமான லுக்கில் வருகிறாராம். மேலும், ஏமி ஜாக்சனுக்கும் இரண்டு கெட்டப்புகள் உள்ளதாம்.