வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (15:58 IST)

பாரத ரத்னாவாகும் மோகன்லால்

பத்ம விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் மோகன்லால் எப்போது பாரத ரத்னாவானார் என்று ஆச்சரியமாக இருக்கும். இந்த பாரத ரத்னா விருதல்ல, மோகன்லால் நடிக்கும் படத்தின் பெயர்.
 
ரஞ்சித்தின், லோஹம் படத்தில் நடித்துவரும் மோகன்லால் அதையடுத்து அனில் இயக்கத்தில் பாரத ரத்னா என்ற படத்தில் நடிக்கிறார் இதில் மோகன்லாலுக்கு போலீஸ்அதிகாரி வேடம்.
 
அனில் மோகன்லாலை வைத்து ஏற்கனவே படங்கள் இயக்கியவர். அவர் கடைசியாக சுரேஷ் கோபியை வைத்து இயக்கிய படம் கடந்த 1997 -இல் வெளியானது. கிட்டத்தட்ட 25 வருடங்களாக வாய்ப்பில்லாமல் இருந்தவரை பாரத ரத்னா கதையை கேட்டு மீண்டும் பீல்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் மோகன்லால்.
 
பாராட்ட வேண்டிய விஷயம்.