1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Tamilarasu
Last Modified: திங்கள், 1 செப்டம்பர் 2014 (15:22 IST)

கமல் படத்தில் உதவி இயக்குனராக மோகன்லால் மகன்

நடிகர்களின் வாரிசுகள் தவறாமல் நடிகர்களாகி வருகிறார்கள். மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் மலையாளத்தில் பிரபல ஹீரோவாகிவிட்டார். ஜெயராமின் மகன் காளிதாஸ் ஹீரோவாகும் படம் இன்று ஆரம்பமாகிறது. மோகன்லாலின் மகன் மட்டும் விதிவிலக்கா என்ன?

அவரும் விரைவில் படத்தில் நடிப்பார் என்று சொல்லிக் கொண்டிருந்த வேளையில் ட்ராக்கை மாற்றி உதவி இயக்குனராகியிருக்கிறார்.

மோகன்லாலின் மகன் பெயர் பிரணவ். சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தோன்றியிருக்கிறார். அதனால் அவரும் விரைவில் நடிக்க வருவார் என்றுதான் நினைத்தனர். இந்நிலையில் தமிழில் ஜீத்து ஜோ‌சப் கமலை வைத்து இயக்கி வரும் பாபநாசம் படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்க்கிறார். படம் இயக்குவதுதான் பிரணவின் லட்சியமாம்.

இதே லட்சியத்துடன் சினிமாவுக்குள் நுழைந்த கார்த்தி, விஷால், சித்தார்த் எல்லாம் இப்போது முன்னணி ஹீரோக்கள். அந்த விபத்து பிரணவுக்கு நேராமலிருக்கட்டும்.