1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By அபிமுகதீசு
Last Updated : புதன், 19 அக்டோபர் 2016 (18:09 IST)

தமிழில் ரீமேக்காகும் மோகன்லாலின் புலிமுருகன்

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான புலிமுருகன் அதரடியான வெற்றியை பெற்றதால, அதை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர்
 

 



வைஷாக் இயக்கத்தில் மோகன்லால், கமலினி முகர்ஜி, நமிதா நடித்த புலிமுருகன் கடந்த 7ஆம் தேதி வெளியானது. படம் இதுவரை மலையாள சினிமா சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு வசூலுடன் ஓடுகிறது. முதல்முறையாக இந்தப் படம் மலையாள சினிமா சரித்திரத்தில் 100 கோடிகளை தாண்டும் என கருதப்படுகிறது. 
 
இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். தயாரிப்பாளர் ரமேஷ் பிள்ளையே ரீமேக் முயற்சியை முன்னெடுத்துள்ளார். தமிழில் கமலை நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்கள்.