போதை பொருள், துப்பாக்கி, ஜெப மாலை..! – வைரலாகும் ருத்ர தாண்டவம் ஃபர்ஸ்ட் லுக்!

Rudhra Thandavam
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (12:06 IST)
தமிழில் திரௌபதி படம் மூலமாக பிரபலமான இயக்குனர் மோகன் ஜி யின் அடுத்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தனது முதலாவது படத்திலேயே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் இயக்குனர் மோகன் ஜி. நாடக காதல் அதன் பின்னால் இயங்கும் கும்பல் என்ற கருவை வைத்து இவர் இயக்கிய “திரௌபதி” படம் சர்ச்சைகளையும், பாராட்டுகளையும் பெற்றது. இந்நிலையில் மோகன் ஜி தனது இரண்டாவது படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

”ருத்ர தாண்டவம்” என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் போஸ்டரில் மீடியா கேமராக்கள், துப்பாக்கி, போதைப்பொருள், ஜெபமாலை போன்றவை இடம்பெற்றுள்ளன. இந்த படம் தமிழகத்தில் ரகசியமாக செயல்படும் போதை மாஃபியாக்களை பற்றியதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. திரௌபதி படத்தில் நடித்த ரிஷி ரிச்சர்டே இந்த படத்திலும் நடிக்கிறார். 2021 மே மாதத்தில் இந்த படம் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :