இரண்டு ஹீரோயின்களுடன் ஜோடி போடும் ‘மெட்ரோ’ சிரிஷ்

cauveri manickam| Last Modified வெள்ளி, 28 ஜூலை 2017 (16:30 IST)
‘மெட்ரோ’ சிரிஷ் நடிக்கும் ‘பிஸ்தா’ படத்தில், அவருக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். 
ஆனந்த் கிருஷ்ணன் இயக்கிய ‘மெட்ரோ’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சிரிஷ். அந்தப் படத்தைத் தொடர்ந்து தரணீதரன் இயக்கத்தில் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் நடித்து வருகிறார் சிரிஷ். இந்நிலையில், அவருடைய மூன்றாவது படத்துக்கு இன்று பூஜை போடப்பட்டுள்ளது. ‘மெட்ரோ’ படத்தில் எடிட்டராகப் பணியாற்றிய ரமேஷ் பாரதி, இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

‘பிஸ்தா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இதன் கதை, கும்பகோணம் மற்றும் காரைக்குடி பகுதிகளில் படமாக்கப்பட இருக்கிறது. ‘சைத்தான்’ அருந்ததி மற்றும் ம்ருதுளா முரளி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். தரண்குமார் இசையமைக்கிறார். இது, அவருக்கு 25வது படம். படத்தில் மொத்தம் 4 பாடல்கள். நான்குமே கம்போஸ் செய்யப்பட்டு, ஷூட்டிங்கிற்கு தயாராக உள்ளன. ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :