செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : புதன், 9 மார்ச் 2016 (14:33 IST)

மிருதன் இயக்குனருடன் மீண்டும் இணையும் ஜெயம் ரவி

படம் சுமார் என்றாலும், கலெக்ஷன் நிறைவாகவே இருந்தது மிருதனுக்கு.


 

 
சமீபத்திய தகவல், மிருதன் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி மீண்டும் நடிக்கிறார்.
 
இந்த புதிய படம் குறித்து பேசிய சக்தி சௌந்தர்ராஜன், "ஜுலையில் படப்பிடிப்பை  தொடங்க திட்டமிட்டுள்ளோம். இது முற்றிலும் புதிய ஜானர்.
 
ஜெயம் ரவி இதுவரை நடித்தப் படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் தயாராகிற படம். டி.இமான் படத்துக்கு இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது" என்றார்.
 
ஜெயம் ரவி ரோமியோ ஜுலியட் படத்தை இயக்கிய லக்ஷ்மண் இயக்கத்தில் போகன் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.