Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மெர்சல் படம் ரிலீஸ் ஆகுமா? விஷால் அதிரடி அறிவிப்பு


sivalingam| Last Updated: வெள்ளி, 13 அக்டோபர் 2017 (15:53 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்ற முடிவால் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்ற டென்ஷன் கடந்த சில நாட்களாக இருந்து வரும் நிலையில் இதுகுறித்து விஷால் சற்றுமுன்னர் பேட்டியளித்துள்ளார்

 
 
இன்று தமிழக அரசுடன் மூன்றாவது நாளாக பேச்சுவார்த்தை நடத்திய விஷால் தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
தமிழக அரசு கேளிக்கை வரியை 2% குறைக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கு தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்,. பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து வரும் தீபாவளி தினத்தன்று 'மெர்சல்' உள்பட அனைத்து படங்களும் ரிலீஸ் செய்ய எந்த தடையும் இல்லை' என்று விஷால் கூறினார்.
 
மேலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட பொதுமக்கள் ஒரு பைசா கூட அதிகமாக கொடுக்க தேவையில்லை என்றும் அதிக கட்டணம் வசூல் செய்யும் திரையரங்குகள் குறித்து புகார் கூறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :