மெர்சல் மெலடி பல வருடங்கள் தாக்கு பிடிக்கும்: எடிட்டர் ரூபன்


sivalingam| Last Modified செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (06:25 IST)
தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் எடிட்டர் ரூபன் சமீபத்தில் இந்த படம் குறித்து பேட்டி ஒன்றில் சில முக்கிய விஷயங்களை தெரிவித்துள்ளார்.


 
 
குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் ஒரு மெலடி பாடல் இந்த படத்தில் இருப்பதாகவும், நீண்ட வருடங்களுக்கு பின்னர் ஒரு திருப்தியான மெலடியை தான் பெர்சனலாக ரசித்து கேட்டதாகவும் கூறிய ரூபன், இந்த பாடல் பல வருடங்களுக்கு தமிழ்த்திரையுலகில் தாக்கு பிடிக்கும் என்று கூறினார்.
 
இந்த மெலடி பாடலை விஜய் பாடியிருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த தகவலை சொல்ல அவர் மறுத்துவிட்டார். அதேபோல் விஜய் நடித்துள்ள மேஜிக்மேன் வேடம் குழந்தைகளுக்கு பிடித்தமான ரோல் என்றும், இந்த படம் அதனாலேயே குடும்ப ஆடியன்ஸ்களுக்கு பிடிக்கும் படமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :