போராட்டத்தை வாபஸ் பெறுகிறார் விஷால்: மெர்சலின் கடைசி தடையும் நீங்கியது


sivalingam| Last Modified வெள்ளி, 13 அக்டோபர் 2017 (14:38 IST)
கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி தமிழக அரசிடம் இரண்டு நாள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித சுமுகமான முடிவும் ஏற்படாததால் தமிழ் திரைப்பட சங்க தலைவர் விஷால் கடும் அதிருப்தியி உள்ளார்.


 
 
ஒருபக்கம் புதிய படங்கள் வெளியீடு இல்லை என்று போராட்ட அறிவிப்பு செய்துவிட்டு இன்னொரு பக்கம் தீபாவளி அன்று 'மெர்சல்' படம் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக அரசு தரப்பினர் கேள்வி கேட்டபோது விஷால் குழுவினர்களால் பதில் சொல்ல முடியவில்லை
 
இந்த நிலையில் 2% வரை வரியை குறைக்க அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், இதனையடுத்து புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என்ற போராட்டம் இன்று அல்லது நாளை வாபஸ் பெறப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் 'மெர்சல்' படத்திற்கு இருந்த கடைசி தடையும் கிட்டத்தட்ட நீங்கிவிட்டதாக கருதப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :