Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மெகாஸ்டாரும், பவர்ஸ்டாரும் இணைந்து கலக்கும் புதிய படம்!

Sasikala| Last Updated: வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (17:43 IST)
தெலுங்குத் திரையுலக மெகாஸ்டார் சிரஞ்சீவியும், அவரது தம்பி பவர்ஸ்டார் பவன் கல்யாணும் முதன் முறையாக இணைந்து  நடிக்கவுள்ளனர். இந்த செய்தியை கேட்டு தெலுங்கு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

 
இயக்குனர் திரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகி வரும் புதுப் படம் ஒன்றில் இருவரும் இணைந்து நடிக்கவிருக்கும் செய்தியை  பிரபல தயாரிப்பாளரான சுப்புராமி ரெட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 
 
சுப்பராமி ரெட்டி இதுகுறித்து கூறியபோது, கைதி நம்பர் 150 படத்தில் சிரஞ்சீவியின் நடிப்பைப் பார்த்தபிறகு நான் மீண்டும்  படங்கள் தயாரிக்கவேண்டும் என்கிற ஆசை வந்தது. அப்போதுதான் இந்தப் படத்தை இயக்க த்ரிவிக்ரம் சரியாக நபராக என்று  தோன்றியது எனக் கூறியுள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :