வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 2 மே 2015 (09:46 IST)

நேற்று வெளியானது மசாலா படம் டீஸர்

கேமராமேன் லக்ஷ்மண் எழுதி இயக்கும் முதல் படம், மசாலா படம். பாபி சிம்ஹா, மிர்ச்சி, சிவா, புதுமுகம் கௌரவ் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். நில் கவனி செல்லாதே படத்தின் நாயகி லக்ஷ்மி தேவி ஹீரோயின்.
 
தமிழ்ப் படங்களை விமர்சனம் என்ற பெயரில் கிழித்து தொங்கவிடும் ஒருவரை அழைத்து, சரி, நீ சொல்ற மாதிரி மசாலா இல்லாத ஒரு படத்தை எடு, நான் பணம் தர்றேன் என்கிறார் ஒருவர். அந்த விமர்சகரும் மூன்று பேர்களது வாழ்க்கையை ஃபாலோ செய்து ஒரு கதை எழுதுகிறார். 
 
கடைசியில் பார்த்தால், அந்த உண்மைக் கதையும் வழக்கமான தமிழ் மசாலா படம் போலவே இருக்கிறது. இதுதான் மசாலா படத்தின் அவுட் லைன். நேற்று படத்தின் முதல் டீஸரை வெளியிட்டிருக்கிறார்கள்.