பாதியில் நிற்கும் மன்சூரலிகானின் மகன் படம்


Sugapriya Prakash| Last Modified வியாழன், 1 டிசம்பர் 2016 (16:33 IST)
எடக்கு மடக்கான பெயர்களில் படங்கள் எடுத்து வரும் மன்சூரலிகானின் புதிய படம் எனக்கு இது எனக்கு அது. இதுவும் லேட்டஸ்ட் பெயர்தான், இதற்குமுன் வைத்திருந்தது இதைவிட வித்தியாசமான பெயர்.

 
 
இந்தப் படத்தில் மன்சூரலிகானின் மகனும் நடித்துவந்தார். குறும்படங்கள் இயக்கி சினிமாவுக்கு வந்த விக்னேஷ் என்ற இளைஞர் இயக்கம்.
 
இந்தப் படம் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விக்னேஷுக்கு ஸ்பாட்டில் நடிகர்களை வேலை வாங்கத் தெரியவில்லை, நேரமும் பணமும் விரயமாகிறது என்று படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்களாம்.
 
புதிய இயக்குனர் கிடைத்ததும் படம் மீண்டும் தொடங்கப்படும் என்கிறார்கள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :