வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 4 மார்ச் 2015 (12:04 IST)

இந்தியில் மங்காத்தாவை ரீமேக் செய்யும் ஸ்டுடியோ கிரீன்

அஜீத் நடிப்பில் சமீபத்தில் வந்த படங்களில் முதலிடம் மங்கத்தாவுக்குதான். அஜீத் கேஷுவலாகவும், அமர்க்களமாகவும் மங்காத்தாவில் நடித்திருந்தார். 
தமிழில் வெற்றி பெற்ற மங்காத்தாவை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளது, ஸ்டுடியோ கிரீன்.
 
கார்த்தியின் படங்களையும் அவ்வப்போது சூர்யாவின் படங்களையும் மட்டும் தயாரித்து கொண்டிருந்த ஸ்டுடியோ கிரீன், கார்த்தி படங்களின் தொடர் தோல்வியால் பாதையை மாற்றியுள்ளது. ரஜினி முருகன், ஓ காதல் கண்மணி ஆகிய படங்களின் தமிழக விநியோக உரிமையை வாங்கியிருப்பவர்கள், மங்காத்தாவை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியிலும் இறங்கி உள்ளனர்.
 
படத்தில் யார் நடிக்கிறார்கள், இயக்குவது யார் போன்ற விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.