1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 27 மே 2014 (13:24 IST)

கலக்கும் ஹவ் ஓல்ட் ஆர் யூ

மஞ்சு வாரியர் நடித்திருக்கும் ஹவ் ஓல்ட் ஆர் யூ வெளியான முதல் வாரத்தில் 3.35 கோடிகளை கேரளாவில் வசூலித்துள்ளது. கேரளாவைப் பொறுத்தவரை இது அதிகபட்ச வசூல்.
திலீப் - மஞ்சு வாரியரின் திருமண பந்தத்தில் விரிசல் விழ ஆரம்பித்தபின் ஒரு வருட காலத்திற்கும் மேல் இருவரும் தனித்தனியாகதான் வாழ்ந்து வந்தனர். மீண்டும் நடிக்க வேண்டும் என்ற மஞ்சுவின் விருப்பமே அவர்களின் திருமண பந்தத்துக்கு கேடாக அமைந்தது என்று ஒருசாரர் கூறினர். ஆனால் திலீப் - காவ்யா மாதவன் இடையிலான நெருக்கமே இவர்களின் தாம்பத்தியத்துக்கு தடுமாற்றத்தை தந்தது. விரைவில் திலீப் காவ்யா மாதவனை திருமணம் செய்யப் போகிறார் என கொஞ்சம் பலமாகவே கேரளாவில் பேசப்படுகிறது.
 
இந்நிலையில் 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடித்தார் மஞ்சு. படம் ஹவ் ஓல்ட் ஆர் யூ. மஞ்சுவின் சமீபத்திய நிஜ வாழ்க்கை சங்கடங்களை பிரதியெடுத்திருக்கும் இப்படம் கேரளாவில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடுகிறது. படத்தை இயக்கியிருப்பவர் மலையாள சினிமாவின் இளம் இயக்குனர்களில் ஒருவரான ரோஷன் ஆண்ட்ரூ.
 
ஸ்ரீதேவி எப்படி இங்கிலீஷ் விங்கிலீஷில் திரும்பி வந்தாரோ அதேபோல் வந்திருக்கிறார் மஞ்சு வாரியர். ஸ்ரீதேவிக்கு இங்கிலீஷ் விங்கிலீஷ் என்றால் மஞ்சு வாரியருக்கு ஹவ் ஓல்ட் ஆர் யூ என்று பத்திரிகைகள் கொண்டாடுகின்றன.