1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 27 ஜூலை 2015 (15:45 IST)

பாங்காக்கில் ஷாம், மனிஷா கொய்ராலா டூயட்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகைகளின் மனத்துணிச்சல் பிரமிக்க வைக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, முடி கொட்டிப் போய், முறையான சிகிச்சை எடுத்து அதிலிருந்து மீண்டு வந்து படங்களில் நடித்து வருகிறார், மம்தா மோகன்தாஸ்.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் நார்மலாகி தற்போது பாபநாசத்திலும் நடித்தார், கௌதமி. மனிஷா கொய்ராலா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு யுஎஸ்ஸில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். மோசமான நோய் ஆயிற்றே என்று முடங்கி நிற்காமல் அவரும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
 
குறிப்பாக, தமிழில் தயாராகும், ஒரு மெல்லிய கோடு படத்தில் அவர் ஒரு நாயகி.
 
ஷாம், அர்ஜுன், ரக்ஷா பட், மனிஷா கொய்ராலா நடிக்கும், ஒரு மெல்லிய கோடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று பாங்காக்கில் தொடங்கியுள்ளது. இங்கு இரு பாடல்களை எடுப்பதாக திட்டம். இரண்டில் ஒன்றில் மனிஷா கொய்ராலா ஷாமுடன் நடிக்கிறார். முதலில் இவர்களின் பாடல்தான் படமாக்கப்படுகிறது.
 
ஆக்ஷன் த்ரில்லரான இந்தப் படத்தில் அரசியல்வாதியின் மனைவியாக மனிஷா கொய்ராலாவுக்கு முக்கியமான வேடம். 
 
ரமேஷ் படத்தை இயக்கியுள்ளார். படத்துக்கு இசை, இளையராஜா.