Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மணிரத்னத்தின் அடுத்த படம்தான் என்ன?

சனி, 29 ஜூலை 2017 (15:36 IST)

Widgets Magazine

மணிரத்னத்தின் அடுத்த படம் பற்றி ஏகப்பட்ட தகவல்கள் வெளியாவதால், ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.


 

 
‘காற்று வெளியிடை’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் என்ன படத்தை இயக்கப் போகிறார் என்பதுதான் அவருடைய ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது. ராம் சரண் – அரவிந்த் சாமியை வைத்து ‘தளபதி 2’ படத்தை இயக்கப் போகிறார் என்றும், ‘காற்று வெளியிடை’ ஹீரோயின் அதிதி ராவ் அதில் நடிக்கப் போகிறார் என்றும் தகவல் வெளியானது. பின்னர், அதுவே மாதவன் – ஃபஹத் ஃபாசில் என மாறியது.

அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாத நிலையில், வேறொரு ஸ்கிரிப்ட்டையும் அவர் தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது. அதில் ராம் சரண் ஹீரோவாக நடிக்க, பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான சைஃப் அலிகான் மகள் சாரா அலிகான் ஹீரோயினாக நடிக்கலாம் என்கிறார்கள். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இந்தப் படம் உருவாக இருக்கிறது.

இந்நிலையில், விஜய் சேதுபதிக்கும் ஒன்லைன் சொல்லியிருக்கிறாராம் மணிரத்னம். விஜய் சேதுபதிக்கு அந்த ஒன்லைன் ரொம்பப் பிடித்திருந்தாலும், அடுத்த இரண்டு வருடங்களுக்கு அவர் கால்ஷீட் டைரி நிரம்பி இருக்கிறது. எப்படியாவது அட்ஜெஸ்ட் செய்து மணிரத்னத்துக்கு கால்ஷீட் கொடுப்பார் என்கிறார்கள். இப்படி, மணியின் அடுத்த படம் குறித்து ஏகப்பட்ட தகவல்கள் உலா வருவதால், ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தீபிகாவை நினைத்து உருகும் பிரபல ஹாலிவுட் ஹீரோ

பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல், பாலிவுட் நடிகை தீபிகாவுடன் எடுத்த புகைப்படத்தை தனது ...

news

இரண்டே நாள் கால்ஷீட்; ரூ.5 கோடி சம்பளம்: நயன்தாரா அதிரடி டீல்!!

நடிகை நயன்தாரா முன்னணி நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்கிறார்.

news

ஓவர் ஆக்டிங் ஜூலியை ஓங்கி மூஞ்சிலேயே குத்துவேன்: அதிரடியில் இறங்கிய ஓவியா!

நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா, ஜூலி இடையே இருந்த மோதல் வெடித்தது. இதில் ...

news

ஹீரோயினுக்கு பிக் பாக்கெட் அடிக்க சொல்லிக்கொடுத்த மிஷ்கின்

‘துப்பறிவாளன்’ படத்தின் ஹீரோயினுக்கு, பிக் பாக்கெட் அடிக்க சொல்லிக் கொடுத்துள்ளார் ...

Widgets Magazine Widgets Magazine