வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 30 அக்டோபர் 2014 (14:54 IST)

மணிரத்னத்துக்கு பிடிச்சிருக்கு - இயக்குனர் ஹேப்பி

நவம்பர் 7 கண்ணனின் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா வெளியாகிறது. இந்தப் படத்தின் பாடல்களை ஸ்பெஷலாக மணிரத்னத்துக்கு போட்டு காண்பித்தார் கண்ணன்.
 
கண்ணன் தொழில் படித்தது மணிரத்னத்திடம். அவரது அசிஸ்டெண்ட்தான் கண்ணன். அந்த நட்பில் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தின் பாடல்களை மணிரத்னத்துக்கு திரையிட்டிருக்கிறார். குரு ஓகே என்றால் ஆஸ்கரே கிடைத்த மாதிரி அல்லவா.
 
பாடல்கள் மணிரத்னத்தை இம்ப்ரஸ் செய்துள்ளது. முக்கியமான ப்ரியா ஆனந்தின் ஸ்கிரீன் ப்ரெசன்ஸ். பாடல்கள் எடுப்பதில் மணிரத்னம் மாஸ்டர். அவருக்கே பாடல்கள் பிடித்துப் போனதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் கண்ணன்.
 
இந்தப் படத்தில் விமல், ப்ரியா ஆனந்த், சூரி, விஷாக சிங் நடித்துள்ளனர். லட்சுமி மேனன் ஒரு பாடல் பாடியுள்ளார். அந்தப் பாடலுக்கு ஆட்டம் போட்டிருப்பவர் நடிகை இனியா. படத்தின் பாதி கதை ரயில் நடப்பது இந்தப் படத்தின் சிறப்புகளில் ஒன்று.