1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Modified: புதன், 23 செப்டம்பர் 2015 (16:23 IST)

மம்முட்டியை அடித்து வெளுக்கும் சோப்பு விளம்பரம்

அடடா இப்படி வழுக்கி விழுந்திட்டோமே என்று சோகத்துடன் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் மம்முட்டி. என்ன விவகாரம்?
 
இந்துலேகா என்ற சோப்பு விளம்பரத்தில், இந்த சோப்பை தேய்த்து குளித்தால் சிவப்பாகலாம் என்று பேசி நடித்திருந்தார் மம்முட்டி. சோப்பு கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து இப்படித்தானே விளம்பரம் செய்திருக்கிறார்கள். மம்முட்டிக்கு மட்டும் எப்படி வந்தது சோதனை?
 
கேரள கடவுளின் தேசம் மட்டுமில்லை குசும்பர்களின் நாடும்கூட. கே.சாத்து என்கிற சிற்பி, மம்முட்டி சொன்னதால் இந்துலேகா சோப்பை ஒரு வருடமாக தேய்த்து குளிக்கிறேன்.
 
யுவர் ஆனர், இன்றுவரை நான் சிவப்பாகவில்லை என்று ஒரு வழக்கை போட்டார். வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், விளக்கம் அளிக்கும்படி மம்முட்டிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
 
சோப்பு விளம்பரத்தில் நடிக்கும்போது, சோப்பு இப்படி வழுக்கிவிடும் என்று மெகா ஸ்டார் நினைத்திருக்க மாட்டார்.