மம்முட்டியா? பிரபுதேவாவா? - சீனு ராமசாமி குழப்பம்

Sasikala| Last Updated: வெள்ளி, 6 ஜனவரி 2017 (14:09 IST)
ஒரேநேரத்தில் இரண்டு ஸ்கிரிப்ட்கள் எழுதி வருகிறாராம் சீனு ராமசாமி. ஒன்று மாமனிதன் இன்னொன்று சம்போ சிவ சம்போ.

 
தர்மதுரை வெளியானதும் மம்முட்டியை சந்தித்து சீனு கதை சொன்னார். இந்நிலையில், பிரபுதேவாவை மனதில் வைத்து  இன்னொரு ஸ்கிரிப்டையும் தயார் செய்து வருகிறார். மம்முட்டி, பிரபுதேவா இருவரில் யார் சீனுவின் அடுத்த ஹீரோ என்பதில்  குழப்பம் இருக்கிறது.
 
சீனு ராமசாமியிடம் கேட்டால், ஸ்கிரிப்டை முடித்த பிறகுதான் எதையும் தீர்மானிப்பேன் என்கிறார். அவர் சொல்வதும் சரிதான்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :