ஆண் பாலியல் தொழிலாளி ரோலில் ஹீரோ; எந்த படத்தில் தெரியுமா...?

Last Updated: வெள்ளி, 20 ஜூலை 2018 (11:21 IST)
சுரேஷ்.ஜி இயக்கத்தில் நாளை வெளியாக இருக்கும் `போத' படத்தில் கதாநாயகன் விக்கி ஆண் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ள கூறப்படுகிறது.
சுரேஷ்.ஜி இயக்கத்தில் விக்கி, வினோத், மிப்பு, உதயபனுயின் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் `போத'. படத்தில் நடித்தது குறித்து நாயகன் விக்கி கூறுகையில், சின்ன வயது முதலே எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை, அதற்கு காரணம் எனது தந்தை தான். பல வருடங்களுக்கு முன் `எத்தனை மனிதர்கள்' உள்ளிட்ட ஒரு  சில டி.வி. சீரியல்களில் தலைகாட்டிய அவரால், சினிமா நடிகனாக ஜெயிக்க முடியவில்லை.
 
அவரது ஆசையை நிறைவேற்ற `வடகறி', `அச்சமில்லை அச்சமில்லை', `நிலா' உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இந்த  நிலையில்தான் `போத' பட வாய்ப்பு கிடைத்து, அதில் நாயகனாக வருகிறேன். மேலும் அதில் தான் ஆண் பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பதாகவும்,  மற்றபடி இது பணத்தை தேடிச் செல்லும் ஒரு த்ரில்லர் கதை தான். இவ்வாறு அவர் கூறினார்.
 
இப்படத்தில் நாயகி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. சித்தார்த் விபின் இசையமைத்திருக்கும் இந்த படம் வருகிற ஜூலை 21-ஆம் தேதி (நாளை) ரிலீசாக  இருக்கிறது. 


இதில் மேலும் படிக்கவும் :