சினிமாவில் இருந்து விலக விரும்பும் சூப்பர்ஸ்டார்!!


Sugapriya Prakash| Last Modified திங்கள், 9 ஜனவரி 2017 (14:18 IST)
பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். இவர் மலையாள சூப்பர் ஸ்டார் எனவும் அழைக்கப்படுகிறார்.

 
 
56 வயதாகும் மோகன்லால், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். சினிமாவை தவிர்த்து பொது நலன் சார்ந்த வி‌ஷயங்களும் ஆர்வம் கொண்டவர். 
 
இந்நிலையில், சினிமாவில் இருந்து விலக விரும்புவதாக மோகன்லால் ஓர் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். மோகன்லாலுக்கு மலையாளம் மட்டுமின்றி தமிழ் திரையுலகிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எனவே இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தனது கனவு திட்டமான மலையாள முன்னணி கதாசிரியர் வாசுதேவன் நாயரின் ‘ரண்டமூலம்’ படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும். இந்த படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :