நடிகை பாவனா நிச்சியதார்த்தம்; தயாரிப்பாளரை மணக்கிறார்


Abimukatheesh| Last Updated: வியாழன், 9 மார்ச் 2017 (19:48 IST)
நடிகை பாவனாவின் திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில்  நடைப்பெற்றது. கன்னட தயாரிப்பாளர் நவீனை திருமணம் செய்கிறார்.

 

 
நடிகை பாவனா அண்மையில் பாலியல் தொல்லைக்கு அளான செய்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று பாவனா - நவீன் நிச்சயதார்த்தம் கொச்சியில் எளிமையாக நடைபெற்றது.
 
நனீன் கன்னட பட தயாரிப்பாளர். இருவருக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற இருந்தது. பாவனா தொடர்ந்து மலையாள படங்களில் பிஸியாக நடித்து வந்ததால், இவர்களின் திருமணம் தள்ளிப்போனது. தற்போது இந்த நிச்சயதார்த்தம் கண்டிப்பாக பாவனாவிற்கு புத்துணர்வை அளிக்கும்.
 
மன உளைச்சலில் இருந்து வந்த பாவனாவிற்கு இப்படி ஒரு சுப நிகழ்ச்சி பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி அவரை மகிழ்வு பாதையில் அழைத்து செல்லும். நிச்சயதார்த்த விழாவில் இருவீட்டாரை சேர்ந்த நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில், விரைவில் திருமண தேதியையும் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 
தற்போது இவரின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :