வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 31 ஜனவரி 2015 (14:35 IST)

ஆடு ஒரு பயங்கர மிருகம்

இதென்னடா கூத்து. ஆடு பயங்கர மிருகமா? இது ஒரு படத்தின் பெயர் என்றால் நம்ப முடிகிறதா. நல்லவேளை படம் தயாராகியிருப்பது தமிழில் இல்லை, மலையாளத்தில்.
 
மலையாள இளம் நடிகர்களில் வித்தியாசமான வேடங்களில் நடிப்பவர் ஜெய்சூர்யா. வசூல்ராஜா எம்பிபிஎஸ்ஸில் கேன்சர் நோயாளியாக நடித்தவர். அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படத்துக்கு வைத்திருக்கும் பெயர், ஆடு - ஒரு பீகர ஜீவியானு. தமிழில், ஆடு - ஒரு பயங்கர மிருகம்.
 
மிதுன் மேனுவல் தாமஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை நடிகையும் தயாரிப்பாளருமான சான்ட்ரா தாமஸ் தயாரித்துள்ளார். ரொமான்டிக் காமெடிப் படமான இது ஃபெப்ரவரியில் திரைக்கு வருகிறது.