Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மகேஷ் பாபாவுக்கு ஜோடியான பூஜா ஹெக்டே

CM| Last Updated: வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (21:35 IST)
மகேஷ் பாபு நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார்.
மகேஷ் பாபு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘ஸ்பைடர்’. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்தப் படத்தை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார்.

இது மகேஷ்பாபுவின் 23வது படம். அடுத்து தன்னுடைய 24வது படமான ‘பரத் அனி நேனு’ ரிலீஸுக்காகக் காத்திருக்கிறார் மகேஷ் பாபு. ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில், தன்னுடைய 25வது படத்துக்குத் தயாராகிவிட்டார் மகேஷ் பாபு. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, ‘தோழா’ படத்தை இயக்கிய வம்சி இயக்குகிறார். இந்தப் படத்தின் ஹீரோயினாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே என்பவர் குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :