வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 26 அக்டோபர் 2016 (13:59 IST)

ஐயோ தனுஷா.... வேண்டாம்மா!! மடோனாவை கலாய்த்த ரசிகர்கள்

தனுஷ் இயக்கும் பவர் பாண்டி படத்தில் நடிப்பதாகக் டுவிட்டரில் நடிகை மடோனா செபாஸ்டியன் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகிறனர்.


 
 
கேரளாவைச் சேர்ந்தவர் மடோனா செபாஸ்டியன். இவர், பிரேமம் படத்தில் நடித்ததன் மூலமாக, மலையாளம், தமிழ் சினிமாவில் பிரபலம் அடைந்துள்ளார். விஜய் சேதுபதி உடன் இணைந்து, காதலும் கடந்து போகும் என்ற தமிழ் படத்திலும் நடித்து, ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
 
இந்நிலையில், மடோனா, தனுஷ் இயக்கி, ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கும் பவர் பாண்டி படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்தச் செய்தியை, டுவிட்டரில் மடோனா பதிவிட்டிருந்தார். 
 
தனுஷ் உடன் நடிக்க வேண்டாம் என்றும், அவரோடு நடித்தால், வாழ்க்கையே பாழாகிவிடும் என்றும் கூறி, டுவிட்டர் பதிவர்கள், மடோனாவை சராமரியாகக் கலாய்த்து வருகின்றனர். 
 
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, விவாகரத்துக்கும் தனுஷ்தான் காரணம் என, வதந்தி வெளியானது. இதன் அடிப்படையிலேயே, மடோனாவை, டுவிட்டர் பதிவர்கள் கலாய்ப்பதாக தெரிகிறது.