1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 1 ஜூலை 2017 (17:44 IST)

மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் மறு தணிக்கைக்கு சென்ற விக்ரம் வேதா

மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் விக்ரம் வேதா படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக மாதவனும், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கேங்க்ஸ்டராக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர்.

 
வரலட்சுமி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், கதிர், பிரேம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. தணிக்கை அதிகாரிகள் படத்தைப் பார்த்து ‘ஏ’ சான்றிதழ் வழங்கவே படக்குழு அதிர்ச்சியடைந்தது. 
 
தற்போது முதல் தணிக்கையில் ‘ஏ’ சான்றிதழ் வாங்கிய ‘விக்ரம் வேதா’ படம் மீண்டும் ஒரு முறை தணிக்கைக்கு சென்றுள்ளது. ஜூலை 7-ம் தேதி வெளியீட்டுக்கு தயாராகி விடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.