1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 19 டிசம்பர் 2014 (12:15 IST)

மாதவனின் இறுதிச் சுற்றில் லண்டன் ஸ்டண்ட் மாஸ்டர்

மாதவன் நடித்து வரும் இறுதிச் சுற்றி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் மாதவன் பாக்ஸராக நடித்துள்ளார். ரித்திகா ஹீரோயின். சுதா படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்துக்காக யுஎஸ் சென்று தனது உடம்பை ஒரு பாக்ஸரைப் போல் மெருகேற்றிக் கொண்டார் மாதவன். பழைய சாக்லெட் பாய் லுக் போயே போச்.
 
பாக்ஸிங் சம்பந்தப்பட்ட படம் என்பதால் லண்டனைச் சேர்ந்த டாம் டெல்மர் என்ற பிரபல சண்டைக் கலைஞரை வைத்து ஆக்ஷன் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். 
 
இறுதிச் சுற்று இயக்குனர் சுதா, நடிகர் மாதவன் இருவருக்கும் மட்டுமின்றி தமிழ் சினிமாவுக்கே அதன் முகத்தை புதுப்பிக்கும் படமாக இருக்கும் என்கிறார்கள். பார்ப்போம்.