வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2017 (16:37 IST)

மாரி பட இயக்குனரின் சீரியல் கதை: டிரைலர் இதோ!!

தனுஷ் நடித்த மாரி படத்தை இயக்கிய பாலாஜி மோகன், தற்போது வெப் சீரியஸ் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார்.


 
 
“As I’m suffering from Kadhal" என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரை, ஹாட் ஸ்டார் இணையதளத்திற்காக இயக்க உள்ளார். இந்த தொடர் வரும் ஜுன் 16 ஆம் தேதி துவங்க உள்ளது.
 
இந்த கதையை திரைப்படத்திற்காக எழுதி, பின்னர் இதை நாடகமாக எடுத்தால் சிறப்பாக இருக்கும் என உணர்ந்து இதனை சீரியலாக மாற்றி அமைத்தாராம் இயக்குனர்.
 
இந்த தொடரை தனது தயாரிப்பு நிறுவனமான “ஓப்பன் விண்டோ” சார்பாக தயாராக்க உள்ளார். இது போன்ற வெப் சீரிஸ் நாடகங்கள் வெளிநாடுகளில் மிகப்பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.