வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 30 ஜூலை 2015 (11:34 IST)

வெளிநாடுகளில் பாகுபலி, மாரி வசூல் நிலவரம்

வெளிநாடுகளில் தனது வசூல் வேட்டையை பாகுபலி தொடர்கிறது. மாரியும் மோசமில்லாத வசூலை பெற்றுள்ளது.
 

 

பாகுபலி தெலுங்குப் பதிப்பு யுஎஸ்ஸில் கடந்த ஞாயிறுவரை 41.45 கோடிகளை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. இப்படியொரு பிரமாண்ட வசூலை தென்னிந்திய சினிமா இதுவரை அனுபவப்பட்டதில்லை.

பாகுபலி தமிழ் பதிப்பு கடந்த ஞாயிறுவரை இங்கு 3.63 கோடிகளை வசூலித்துள்ளது. பாகுபலியின் இந்திப் பதிப்பின் வசூல், 1.02 கோடி.
 

 

மாரியின் யுஎஸ் வசூல், 57.21 லட்சங்கள்.

கனடாவில் பாகுபலி தெலுங்கு பதிப்பு கடந்த ஞாயிறுவரை 82.64 லட்சங்களை வசூலித்துள்ளது. தமிழ் பதிப்பின் வசூல் 67.63 லட்சங்கள். இந்திப் பதிப்பு 21.13 லட்சங்களை தனதாக்கியுள்ளது.

யுகே மற்றும் அயர்லாந்தில் மாரி 64.87 லட்சங்களை வசப்படுத்தியுள்ளது. இங்கு பாகுபலியின் தெலுங்கு பதிப்பு இதுவரை 84.12 லட்சங்களை வசூலித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடந்த ஞாயிறுவரை பாகுபலியின் தமிழ் பதிப்பு 1.19 கோடியை வசூலித்துள்ளது. மாரியின் வசூல் 37.81 லட்சங்கள்.

மலேசியாவில் பாகுபலி தமிழ் 1.64 கோடியும், மாரி 1.66 கோடியும் வசூலித்துள்ளன.