செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Modified: புதன், 2 ஏப்ரல் 2014 (15:41 IST)

மான் கராத்தே தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை 9 கோடி

சிவ கார்த்திகேயன் நடித்துள்ள மான் கராத்தே படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை 9 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. 
குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்த நடிகர் சிவ கார்த்திகேயனாகதான் இருக்கும். மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம். ஐந்தே படங்களில் இவரின் வியாபார எல்லை நாற்பது கோடியை தாண்டியுள்ளது. 
 
ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகும் இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 345 திரையரங்குகளில் வெளியாகிறது. கேரளா, கர்நாடகா, வட இந்தியா மற்றும் வெளிநாடுகளையும் சேர்த்து மொத்த திரையரங்குகள் 675. இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி 9 கோடிக்கு வாங்கியுள்ளது. ரஜினி, விஜய், அஜீத், சூர்யா படங்களுக்குப் பிறகு இவ்வளவு பெரிய தொகைக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்கப்பட்டிருப்பது சிவ கார்த்திகேயனுக்குதான். இது தவிர திரையரங்கு வெளியீட்டு உரிமையில் 28 கோடிகளும் வெளிநாட்டு உரிமையில் 5 கோடியுமாக மொத்தம் 42 கோடியை படம் சம்பாதித்துள்ளது. ஆடியோ ரைட்ஸை சேர்த்தால் இது இன்னும் அதிகமாகும்.
 
இப்படியே போனால் விஜய், அஜீத்தின் இடத்தை விரைவில் சிவ கார்த்திகேயன் எட்டிவிடுவார், சந்தேகமில்லை.