1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2015 (10:06 IST)

எம்.எஸ்.வியின் உடல்நிலையில் முன்னேற்றம் - விரைவில் வீடு திரும்புவார் என மகன் தகவல்

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல்நிலை வேகமாக தேறி வருகிறது. இன்று அவர் வீடு திரும்பக் கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
 
எம்.எஸ்.விஸ்வநாதன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சனிக்கிழமை இளையராஜா அவரை சந்தித்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார். தன் கையால் அவருக்கு உணவு ஊட்டினார்.
 
எம்.எஸ்.வி.யின் உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும், இன்று அனேகமாக அவர் வீடு திரும்புவார் எனவும் அவரது மகன் கோபி தெரிவித்துள்ளார்.