1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 7 ஜூலை 2015 (16:19 IST)

எம்.எஸ்.விஸ்வநாதன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல்நிலை சில வாரங்களுக்கு முன் மோசமானது. உடனடியாக அவர் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை தேறி வந்தது. இரண்டு தினங்களில் வீட்டிற்கு செல்லலாம் என அவரது மகன் கூறினார்.
 
இந்நிலையில் மீண்டும் அவரது உடல்நிலை மோசமடைந்தது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மெல்லிசை மன்னரின் உடல்நிலை திரையுலகில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.