Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கூட்டத்தை பார்த்து அதிர்ச்சியில் மயங்கிய ஷாலினி பாண்டே

வியாழன், 14 செப்டம்பர் 2017 (16:36 IST)

Widgets Magazine

விஜய் தேவரகொண்டா நடிப்பில், சந்தீப் வாங்கா இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும்  வரவேற்பை பெற்றுள்ள படம் 'அர்ஜுன் ரெட்டி'. முதலில் குறைவான திரையரங்குகளிலேயே வெளியாகி பின் ‘பப்ளிக் டாக்’ மூலம் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

 
இந்த படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு வந்திருக்கிறார் ஷாலினி பாண்டே. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன்  லிப்லாக் காட்சிகளிலும் நடித்திருக்கிறார் ஷாலினி. தெலுங்கு தேச மக்கள் ஷாலினியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதனையடுத்து தமிழ், கன்னட மொழிகளிலும் நடிக்க ஷாலினிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
 
இந்நிலையில் ஷாலினி பாண்டே, ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஒரு செல்போன் கடையை திறந்து வைக்கச் சென்றுள்ளார். ஷாலினி வருவதை அறிந்து அங்கு ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தார்கள். ஏற்கெனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஷாலினி தன்னைப் பார்க்க வந்த கூட்டத்தைப் பார்த்து மயங்கி விழுந்திருக்கிறார்.
 
பின்னர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரம் ஓய்வெடுத்த ஷாலினி,  அதன் பிறகு திறப்பு விழாவில் கலந்துகொண்டு பிறகு ஐதராபாத் திரும்பியிருக்கிறார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மணிரத்னம் படத்தில் சிம்பு நடிப்பதற்கு காரணம் குருபெயர்ச்சி - டி.ஆர் ஜோதிடம்

இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடிப்பதற்கு நடிகர் சிம்பு ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

news

விக்ரம் படம் தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை– இயக்குநர் திட்டவட்டம்

‘விக்ரம் படம் தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை’ என அந்தப் படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

news

மணிரத்னம் – சிம்புவைச் சேர்த்து வைத்தது யார்னு தெரியுமா?

மணிரத்னம் – சிம்பு கூட்டணிக்கு, ஒரு நடிகரைத்தான் காரணமாகச் சொல்கிறார்கள்.

news

டாஸ்க்கை பார்த்து கடுப்பில் டிவியை ஆஃப் செய்த நடிகை ஸ்ரீப்ரியா

பிக்பாஸ் வீட்டில் சிநேகன், சுஜா இடையே கடும் போட்டி நிலவியது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ...

Widgets Magazine Widgets Magazine