செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 24 அக்டோபர் 2014 (15:00 IST)

நவம்பரில் பாடலாக வரும் லிங்கா

தீபாவளிக்கு சொல்லாமல் கொள்ளாமல் லிங்காவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியவர்கள் நவம்பரில் படத்தின் பாடல்களை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
ரஹ்மான் ஏற்கனவே அனைத்துப் பாடல்களையும் பதிவு செய்துவிட்டார். முக்கியமாக ரஜினியின் அறிமுகப் பாடல். எஸ்.பி.பி. பாடியிருக்கும் இந்தப் பாடலை பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் எடுக்க முடிவு செய்துள்ளனர். படம் டிசம்பரில் திட்டமிட்டபடி வெளிவருமா என்ற சந்தேகம் ஒருபுறம் இருக்க, நவம்பர் மத்தியில் பாடல்களை வெளியிடுவது என முடிவு செய்து அறிவித்துள்ளனர்.
 
டிசம்பரில் படம் வெளியாகும் என்ற நம்பிக்கையை இந்த அறிவிப்பு அதிகரித்துள்ளது.